கடகம் - தமிழ் மாத ஜோதிடம்
ஆடி மாத ராசி பலன்கள் 17-07-2022 முதல் 16-08-2022 வரை
எதிர்காலத்தைப் பற்றியே எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருக்கும் கடக ராசி நேயர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியை குரு பார்ப்பதால் பிரச்சினைகள் படிப்படியாக தீரும். கண்டகச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
சிம்ம - புதன் சஞ்சாரம்
ஆடி 13-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும் போது விரயத்திற்கேற்ற வருமானம் வந்து கொண்டேயிருக்கும். வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படலாம். பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். நல்ல நிறுவனங்களில் இருந்து அதிக சம்பளம் தருவதாக சொல்லி அழைப்புகள் வரலாம்.
கடக - சுக்ரன் சஞ்சாரம்
ஆடி 22-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசியிலேயே பிரவேசிக்கும் பொழுது பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். வாங்கல் - கொடுக்கல் ஒழுங்காகும். வீடு, இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். தடைப்பட்ட பத்திரப் பதிவு துரிதமாக நடைபெறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.
குருவின் வக்ர இயக்கம்
ஆடி 23-ந் தேதி, மீன ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். 6-க்கு அதிபதியான குரு வக்ரம் பெறுவது நன்மைதான் என்றாலும், அவர் பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியாக இருப்பதால் ஒருசில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும். உறவினர் பகை அதிகரிக்கும். மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டிய நேரம் இது.
6-ம் இடத்திற்கும் அதிபதியாக இருக்கிறார், குரு பகவான். மறைவிடத்திற்கு அதிபதியான குரு வக்ரம் பெறுவது நன்மைதான். உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றங்கள் இனிமை தரும். கடனை செலுத்தி நிம்மதி காண்பீர்கள். தொழில் மாற்ற சிந்தனைகள் மேலோங்கும்.
ரிஷப - செவ்வாய் சஞ்சாரம்
ஆடி 25-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். இக்காலம் ஒரு இனிய காலமாக அமையும். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகமான செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பொருளாதார விருத்தி, உற்சாகத்துடன் செயல்படும் தன்மை, தொழில் முன்னேற்றம், பயணங்களால் பலன், இளைய சகோதரத்துடன் இணக்கம், கடல் வணிகத்தால் மேன்மை தோன்றும். தட்டுப்பாடுகளும், முட்டுக்கட்டைகளும் அகலும்.
இம்மாதம் திங்கட்கிழமை தோறும் கற்பக விநாயகரை வணங்குங்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 19, 20, 24, 25, 31, ஆகஸ்டு: 1, 5, 6, 15, 16 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் மீன குருவின் பார்வையால் சிறப்பான வாழ்க்கை அமையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வருமானம் திருப்தி தரும். கணவன் - மனைவிக்குள் பாசம், அதிகரிக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் எதிர்கால நலன் கருதி நீங்கள் எடுத்த முயற்சிகள் கைகூடும். சகப் பணியாளர்களால் தொல்லை ஏற்பட்டாலும், மேலிடத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.