மீனம் - ஆனி தமிழ் மாத ஜோதிடம்


மீனம் - ஆனி தமிழ் மாத ஜோதிடம்
x
தினத்தந்தி 16 Jun 2023 12:15 AM IST (Updated: 16 Jun 2023 2:51 PM IST)
t-max-icont-min-icon

ஆனி மாத ராசி பலன்கள் 16-06-2023 முதல் 16-07-2023 வரை

உதவும் குணத்தால் உள்ளத்தில் இடம் பிடிக்கும் மீன ராசி நேயர்களே!

ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு ராகுவும் இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதாரம் சிறப்பாகவே இருக்கும்.

மிதுன - புதன்

ஆனி 3-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் பொழுது சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். ேமலும் அவர், சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குவதால் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்பங்களும் பதவிகளும் ஏற்படும். பிள்ளைகள் வழியில் சுபகாரியம் கை கூடும்.

சிம்ம - செவ்வாய்

ஆனி 17-ந் தேதி, சிம்ம ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அப்பொழுது குருவின் பார்வை செவ்வாய் மீது பதிகின்றது. எனவே 'குருமங்கல யோகம்' ஏற்படுகிறது. சுபச்செலவு அதிகரிக்கும். தொழில் ரீதியாக எடுத்த புதுமுயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உயர்பதவி கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். குருவின் பார்வை பதிந்த செவ்வாய் சனியைப் பார்ப்பதால் இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான சூழ்நிலை உருவாகும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்களும் வந்துசேரும். புதிய வாகனம் வாங்கி பயணிக்கும் யோகம் உண்டு.

சிம்ம - சுக்ரன்

ஆனி 18-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் வருகிறார். அவர் அங்குள்ள செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கல யோக'த்தை உருவாக்குகிறார். இதன் விளைவாக குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவம் நடைபெறும். கொடுக்கல் - வாங்கல்கள் சரளமாக இருக்கும். பெண் வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பெற்றோருடன் இருந்த பிரச்சினைகள் அகலும். கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கும். கண்ணியமிக்க நண்பர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் பொறுப்புகள் கூடும். புதிய பதவிகள் கிடைக்கும் யோகம் உண்டு. தொழிலில் பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டு புதியவர்களை சேர்க்க முன்வருவீர்கள்.

கடக - புதன்

ஆனி 19-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். பற்றாக்குறை பட்ஜெட் மாறும். திரும்பிச் சென்ற வரன்கள் மீண்டும் வரலாம். சுபவிரயங்கள் அதிகரிக்கும் நேரமிது. உடல்நலத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் தேவை. புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பங்கு வர்த்தகங்களால் பலன் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி கைகூடும். பிள்ளைகளின் வேலைவாய்ப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் எளிதில் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். கலைஞர்களுக்கு புகழும் அந்தஸ்தும் உயரும். மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண்பெற எடுத்த முயற்சி வெற்றிபெறும். பெண்களுக்கு இல்லம்தேடி நல்ல தகவல் வரலாம். சுப காரியங்கள் கைகூடும். தாய் வழி ஆதரவு உண்டு. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 18, 19, 30, ஜூலை: 1, 2, 6, 7, 15, 16.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.


Next Story