தனுசு - தமிழ் மாத ஜோதிடம்


தனுசு - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சித்திரை மாத ராசி பலன்கள் 14-04-2023 முதல் 14-05-2023 வரை

மற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும் தனுசு ராசி நேயர்களே!

சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு சுக ஸ்தானத்தில் பலம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். ஏழரைச் சனி விலகி விட்டது. இனி உங்களுக்கு யோகம்தான். படிப்படியாக நல்ல பலன்கள் உங்களைத் தேடி வரப்போகின்றது. இதுவரை எவ்வளவு முயற்சித்தும் நடைபெறாத காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். முக்கியப் புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். சிக்கல்களும், சிரமங்களும் அகலும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பின்னால் அதிகளவு நன்மை கிடைக்கப்போகின்றது. வாய்ப்புகள் தேடிவரும். வாயுதாக்கள் ஓயும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.

சனியின் சஞ்சாரம்

மாதத் தொடக்கத்தில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். இப்பொழுது ஏழரைச்சனி விலகிவிட்டது. தற்சமயம் ஒருசில மாதங்கள் மட்டுமே கும்பத்தில் சனி இருந்தாலும், அது நற்பலன்களை வழங்கும். கடந்த காலத்தில் இருந்த வம்பு, வழக்குகள் எல்லாம் முடிவுக்கு வரும். நல்ல காரியங்கள் இல்லத்தில் ஒவ்வொன்றாக நடைபெறும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். தெய்வ வழிபாடுகள் திருப்தியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும் நேரம் இது. புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். ஏழரைச்சனி விலகிய இந்த நேரத்தில் வாழ்வை வளமாக்கிக் கொள்ள வழிபிறக்கும்.

மேஷ - குரு

சித்திரை 9-ந் தேதி மேஷ ராசிக்கு குரு வருகின்றார். உங்கள் ராசிக்கு 5-ம் இடத்திற்கு வரும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. மேலும் 9, 11 ஆகிய ஸ்தானங்களிலும் பதிகின்றது. எனவே ஆரோக்கியம் சிறப்பாக அமையும். அதிக உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும். பெரிய மனிதர்களின் ஆதரவோடு பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். உயர்ந்து வரும் பொருளாதாரம் மனதை மகிழ்விக்கும். மங்களகரமான சுபநிகழ்வுகள் இல்லத்தில் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறப் போகின்றது. முன்னோர் வழி சொத்துக்களில் முறையான பங்கீடுகளும் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு மாறுதல்களும் உண்டு.

மிதுன - சுக்ரன்

சித்திரை 20-ந் தேதி மிதுன ராசிக்கு சுக்ரன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். உங்கள் ராசிநாதன் குருவிற்கு பகைக் கிரகமாகவும் விளங்குபவர் சுக்ரன். அவர் சப்தம ஸ்தானத்தில் இருந்து ராசியைப் பார்ப்பது அவ்வளவு நல்லதல்ல. திடீர் தாக்கங்களும், வளர்ச்சிக்கு இடையூறுகளும் வரலாம். நாணயப் பாதிப்புகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை கூட உருவாகலாம். குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். அதிக விலைக்கு வாங்கிய பொருளைக் குறைந்த விலைக்கு விற்க நேரிடும்.

இம்மாதம் ஆதியந்தப் பிரபு வழிபாடு ஆனந்தம் வழங்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஏப்ரல்: 15, 18, 19, 30, மே: 1, 5, 6, 12, 13.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.


Next Story