தனுசு - ஆவணி தமிழ் மாத ஜோதிடம்
ஆவணி மாத ராசி பலன்கள் 18-08-2023 முதல் 17-09-2023 வரை
வருபவரை வரவேற்பதில் வல்லவர்களாக விளங்கும் தனுசு ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசியைப் பார்க்கிறார். ஆயினும் அவர் வக்ரம் பெறும் மாதம் இது. அதே நேரத்தில் சனி வக்ர இயக்கத்தில் பின்னோக்கி வந்து, ஏழரைச் சனியில் பாதச் சனியாக செயல்படப் போகிறார். எனவே பகைக்கு மத்தியில் வாழ்க்கையும், போட்டிக்கு மத்தியில் முன்னேற்றமும் ஏற்படப் போகிறது.
கடக - சுக்ரன்
ஆவணி 1-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்திற்கு வரும்போது 'விபரீத ராஜயோக' அடிப்படையில் எதிர்பாராத விதத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும். பூமி யோகம் முதல் புதிய வாகனம் வாங்கும் யோகம் வரை நடைபெறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அடகு வைத்த நகைகளை மீட்டுக்கொண்டு வருவீர்கள். பகையான உறவினர்கள் உறவாகி பாசம் காட்டுவர். உத்தியோகத்தில் திடீர் முன்னேற்றமும், சம்பள உயர்வும் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
கன்னி - செவ்வாய்
ஆவணி 2-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - விரயாதிபதியான செவ்வாய், 10-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். எனவே புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகள் வழியில் சில நல்ல தகவல்கள் கிடைக்கும். குறிப்பாக படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும். பூர்வீக சொத்துகளை விற்றுவிட்டு, புதிய சொத்துகள் வாங்கும் யோகம் ஒருசிலருக்கு உண்டு. பயணங்கள் பலன் தருவதாக அமையும்.
மகர - சனி
சனி பகவான் ஆவணி 7-ந் தேதி, மகர ராசிக்கு வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு வரும் சனி, குடும்பச் சனியாக சஞ்சரிக்கப் போகிறார். எனவே குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் வந்துசேரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நடைபெறாத ஒருசில காரியங்கள் இப்பொழுது நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை அகலும். சனி வழிபாடு நன்மைகளை வழங்கும்.
புதன் வக்ர நிவர்த்தி
சிம்மத்தில் சஞ்சரிக்கும் புதன், ஆவணி 15-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்து வக்ர நிவர்த்தி பெறுகிறார். எனவே தொட்டது துலங்கும். தொழில் வளம் சிறக்கும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து மகிழ்ச்சி காண்பீர்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும். வெளிநாட்டில் இருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும். புதிய ஒப்பந்தங்கள், பொருளாதார விருத்திக்கு அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் பொறுப்புகள் திடீரென மாற்றப்படலாம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு, பணியாளர்களின் தொல்லை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகளும், அதனால் பிரச்சினைகளும் உருவாகும். கலைஞர்கள், சகக் கலைஞர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரம் இது. மாணவ- மாணவிகளுக்கு கவனச் சிதறல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பெண்களுக்கு மனவருத்தம் அதிகரிக்கும். மகிழ்ச்சி குறையாமல் இருக்க தெய்வ வழிபாடுகள் கைகொடுக்கும். பணிபுரியும் பெண்களுக்கு அருகில் இருப்பவர்களால் பிரச்சினை ஏற்படலாம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஆகஸ்டு: 18, 19, 21, 22, 29, 30, செப்டம்பர்: 2, 3, 11, 14, 17.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.