இன்றைய ராசிபலன்: 03-03-2025

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய பஞ்சாங்கம்
தமிழ் வருடம்: குரோதி தமிழ் மாதம்: மாசி நாள்: 18
ஆங்கில தேதி: 3 ஆங்கில மாதம்: மார்ச் வருடம்: 2025
நட்சத்திரம்:இன்று காலை 10.36 வரை ரேவதி பின்பு அஸ்வினி
திதி : இன்று அதிகாலை 12.58 வரை திரிதியை, இரவு 10.36 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி
யோகம்:சித்த யோகம்
நல்ல நேரம்: காலை 6.30 முதல் 7.30 வரை
நல்ல நேரம்: மாலை 4.30 முதல் 5.30 வரை
ராகு காலம்: காலை 07.30 முதல் 09.00 வரை
எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 வரை
குளிகை: மாலை 1.30 முதல் 3.00 வரை
கௌரி நல்ல நேரம்: காலை 9.30 முதல் 10.30 வரை
கௌரி நல்ல நேரம்: மாலை 7.30 முதல் 8.30 வரை
சூலம்: வடக்கு
சந்திராஷ்டமம்: உத்திரம், அஸ்தம்
இன்றைய ராசிபலன்
மேஷம்
பெண்களுக்கு நல்ல வரன் அமையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் சிரமங்கள் நீங்கும். தம்பதிகளிடையே அன்பு பெருகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். மாணவர்கள் பரிசினை பெறுவர்.
அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை
ரிஷபம்
கடனை அடைக்க வழி பிறக்கும். தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். படிப்பில் ஆர்வம் கூடும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
மிதுனம்
நிதானமுடன் செயல்படுவது நல்லது. வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும் . மனைவிவழியில் உதவிகள் உண்டு. பெண்கள் புதிய தொழில் துவங்க ஏதுவான காலம். உடல் நலம் சிறப்படையும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கடகம்
புது நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். உறவினர்களிடம் சமாதானமாக செல்வீர்கள். பெரிய காரியங்களை விரைவாக முடிப்பீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். வங்கிக்கடன் உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரே
சிம்மம்
அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். ஷேர் மூலமாக பணம் வரும். வசதி, வாய்ப்புகள் கூடும். புதிய வீட்டிற்கு முன் பணம் தருவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். விலகிச் சென்ற நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
கன்னி
இன்று உத்திரம், அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் ஆதலால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்கலாம். கவனம் தேவை. மற்ற இரு நட்சத்திரக்காரர்களான சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இல்லை. தங்கள் பணியை தொடரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
துலாம்
முக்கியமான விசயங்களில் தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. மகனுக்கிருந்து வந்த கூடாப்பழக்க வழக்கம் விலகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
விருச்சிகம்
சொத்து சம்பந்தப்பட்ட வழக்கை நிதானமாக கையாளுங்கள். மாணவர்கள் நற்பெயர் வாங்கி பெற்றோர்களுக்கு பெருமை சேர்ப்பர். முன்கோபத்தை தவிர்த்து விடுங்கள். வியாபாரத்தில் அதிக விற்பனையை கூட்ட புதிய வகை சலுகைகளை தருவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்
தனுசு
சொத்துப் பிரச்னைகள் குறையும்.உ த்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். பெற்றோர்களுக்கு பிள்ளைகளால் மனமகிழ்ச்சி ஏற்படும். பணத்தை தாராளமாக செலவழிப்பதை தவிர்ப்பது நல்லது. நீண்டதூர பயணம் வெற்றிதரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
மகரம்
கோயில் விழாக்களில் கலந்து கொள்வீர்கள். சொத்து சிக்கல்களும் சுமூகமாக முடியும். எதிர்பார்த்த முக்கிய செய்தி மகிழ்வைத் தரும். பணப்பற்றாக்குறை இருந்து கொண்டேயிருக்கும். சிக்கன நடவடிக்கை தேவை. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
கும்பம்
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். இடுப்பு வலி, மூட்டு வலி வந்துபோகும். காதல் விவகாரத்தில் அவசரம் வேண்டாம். கலைத்துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேலையாட்களால் உதவிகள் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்
மீனம்
பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேற்றுமதத்தவர்கள், மொழியினரால் ஆதாயமடைவீர்கள். கலைத்துறையினருக்கு காரியத்தடைகள் ஏற்படும். படம் தேர்வு செய்யும் போது மிகுந்த கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: கரும் பச்சை