ராசிபலன் (29.10.2025): இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணம் பாக்கெட்டை நிரப்பும்..!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
ராசிபலன் (29.10.2025): இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணம் பாக்கெட்டை நிரப்பும்..!
Published on

கிழமை: புதன் கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: ஐப்பசி

நாள்: 12

ஆங்கில தேதி: 29

மாதம்: அக்டோபர்

வருடம்: 2025

நட்சத்திரம்: இன்று பிற்பகல் 2-18 வரை உத்திராடம் பின்பு திருவோணம்

திதி: இன்று காலை 05-22 வரை சப்தமி பின்பு அஷ்டமி

யோகம்: அமிர்த, சித்த யோகம்

நல்ல நேரம்: காலை 9-15 to 10-15

நல்ல நேரம்: மாலை 4-45 to 5-45

ராகு காலம்: மாலை 12-00 to 1-30

எமகண்டம்: காலை 7-30 to 9-00

குளிகை: காலை 10-30 to 12-00

கௌரி நல்ல நேரம்: காலை 10-45 to 11-45

கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 7-30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டம்: திருவாதிரை,புனர்பூசம்

மேஷம்

நடை பாதை வியாபாரிகள் மழையினால் பாதிப்பர். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வேற்றுமதத்தவர் உதவுவார். செலவு கூடும். சிக்கனம் தேவை. தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். விட்டுக்கொடுப்பது நல்லது. பழைய வீட்டை சீர் செய்வீர்கள். வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

ரிசபம்

பிள்ளைகளின் செயல்களில் கவனம் தேவை. ஆன் லைன் வியாபாரம் செழிப்படையும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். தம்பதிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம். பணவரவு நன்றாக இருக்கும். உடல் நலம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

மிதுனம்

இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கடகம்

நல்ல வரண் அமையும். பணம் பாக்கெட்டை நிரப்பும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் வளர்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மைகள் நடக்கும். கணவரிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

சிம்மம்

சிறுதூர பயணங்கள் லாபம் தரும். வெளிநாட்டவர் மற்றும் வேற்றுமொழிக்காரர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகும். அரசியல்வாதிகள் சுதந்திரமாகச் செயல்படுவர். பெண்களுக்கு மதிப்பு கூடும். தம்பதிகளிடையே அன்பு பலப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கன்னி

வெளியூர் பயணம் தாமதமாகும். நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். மாணவர்கள் பகுதி படிப்பில் சேருவர். வியாபாரம் செழிக்கும். உத்யோகஸ்தர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். பெண்களுக்கு இடுப்பு கை, கால் வலி நீங்கும். தம்பதிகளின் அன்யோன்யம் பெருகும்.

அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை

துலாம்

விவசாயிகள் அதிக மழையினால் தடுமாறுவர். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். தம்பதிகள் இணைந்து செயல்படுவர். பூர்வீக சொத்தில் தங்கள் பங்கு கிடைக்கும். வழக்குகளை இழுத்தடிக்கும். மாணவர்கள் விடுமுறையை கைத்தொழில் கற்க பயன்படுத்துவர்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

விருச்சிகம்

காதல் விசயங்களில் கவனம் அவசியம். நண்பர்கள் உண்மையாக இருப்பர். தம்பதிகளின் அன்பு மேலோங்கும். உத்யோகத்தில் மதிப்பு கூடும். பணியாளர்களுக்கு, வேலைப்பளு இருக்கும். வியாபாரத்தில் சூழ்ச்சியை வெல்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவுவர். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்

தனுசு

சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். உத்யோகஸ்தர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். உணவு வியாபாரம் நன்கு நடைபெறும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். தம்பதிகள் சமரசமாக செல்வர். வரவுக்கேற்ப செலவு செய்வர்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மகரம்

அக்கம் பக்கத்தினர் உதவுவர். உறவினர்கள் வருகை உண்டு. மாணவர்கள் விடுமுறையை உறவினர் வீட்டில் கழிப்பர். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நினைத்த பதவி கிடைக்கும். தேக ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த புதிய வேலை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கும்பம்

ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் லாபத்தை கொடுக்கும். கணவன் மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும். மாமியார் மருமகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பர். பெண் உத்யோகஸ்தர்களை சுயமரியாதையுடன் நடத்தப்படுவர். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மீனம்

எதிர்பார்த்திராத சில காரியங்கள் நன்மையில் முடியும். பெண்கள் சுயதொழிலில் முன்னேற்றம் காண்பர். உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அனுசரிப்பது நல்லது. ஆவணங்களை பாதுகாப்பீர்கள். உடல்நிலையில் சிறு பாதிப்பு வரலாம். விருந்து விழா என்று கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com