போர்ஸ் சிட்டிலைன் எம்.யு.வி


போர்ஸ் சிட்டிலைன் எம்.யு.வி
x

பன்முக பயன்பாட்டு வாகனங்களைத் தயாரிக்கும் போர்ஸ் நிறுவனம் தற்போது 10 பேர் பயணிக்கும் வகையிலான எம்.யு.வி. வாகனத்தை சிட்டிலைன் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.15.93 லட்சம். இது டிராக்ஸ் குரூயிஸர் வடிவமைப்பைப் போன்று உள்ளது. முன்புற பம்பர் மற்றும் கிரில் ஆகியன வாகன நிறத்திலேயே உள்ளது. கிரில் சதுர வடிவிலானது. இந்த கிரில்லில் சிட்டிலைன் லோகோ உள்ளது. மூன்று வரிசை இருக்கைகள் உள்ளன.

இது 5,120 மி.மீ. நீளம் கொண்டது. இதில் 2.6 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 91 ஹெச்.பி. திறன் மற்றும் 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டது. இதில் 5 மேனுவல் கியர் வசதி உள்ளது.

ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏ.பி.எஸ்.) மற்றும் எலெக்ட்ரானிக் பிரேக் போர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் (இ.பி.டி.) ஆகியன உள்ளன.


Next Story