கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்தது குறித்து குழந்தைகள் நல ஆணையர் விசாரணை


கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்தது குறித்து குழந்தைகள் நல ஆணையர் விசாரணை
தினத்தந்தி 21 July 2022 10:56 AM IST (Updated: 21 July 2022 10:58 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி மர்ம மான முறையில் உயிரிழந்தார். இவரது மரணத்துக்கு நீதிகேட்டு கடந்த 17-ந்தேதி நடந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது.

இந்தநிலையில், கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்தது குறித்து குழந்தைகள் நல ஆணையர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் நல ஆணையர் சரஸ்வதி தலைமையிலான குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறது.


Next Story