வங்கக் கடலில் வலுப்பெறும் புயல் 5- ஆம் தேதி கரையை கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்


வங்கக் கடலில் வலுப்பெறும் புயல்  5- ஆம் தேதி கரையை கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 1 Dec 2023 9:27 AM GMT (Updated: 1 Dec 2023 12:05 PM GMT)

இந்தப் புயலுக்கு மிக்ஜம் எனப் பெயரிடப்படும். மியான்மர் நாடு வழங்கும் இந்தப் பெயர் அந்நாட்டில் பாயும் ஒரு நதியின் பெயர் ஆகும்.

சென்னை,

சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று தாழ்வு மண்டலமாக மாறி, நாளை (சனிக்கிழமை) புயலாக உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது. அதில் தற்போது மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கும் நிலையில், நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 3 ஆம் தேதி புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயல் வரும் 5 ஆம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக 4 ஆம் தேதி வட தமிழகம் - மசூலிப்பட்டினத்திற்கு இடையே புயல் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது வங்கக் கடலில் உருவாகும் இந்த புயலுக்கு மிக்ஜம் எனப் பெயரிடப்பட உள்ளது. மியான்மர் நாடு வழங்கும் இந்தப் பெயர் அந்நாட்டில் பாயும் ஒரு நதியின் பெயர் ஆகும்.


Next Story