ஜார்க்கண்ட் மந்திரியின் உதவியாளர் வீட்டில் ரெய்டு - ரூ.20 கோடி பறிமுதல்


ஜார்க்கண்ட் மந்திரியின் உதவியாளர் வீட்டில் ரெய்டு - ரூ.20 கோடி பறிமுதல்
x
தினத்தந்தி 6 May 2024 5:35 AM GMT (Updated: 6 May 2024 6:15 AM GMT)

ஜார்க்கண்ட் மந்திரியின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் 20 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநில கிராமப்புற வளர்ச்சித்துறை மந்திரி ஆலம்கிர் ஆலம். கிராமப்புற வளர்ச்சித்துறை சார்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களில் பணமோசடி நடைபெற்றதாக ஆலம்கிர் ஆலம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேவேளை, இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிராமப்புற வளர்ச்சித்துறை தலைமை பொறியாளர் வீரேந்திர ராம் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், பணமோசடி வழக்கு தொடர்பாக மந்திரி ஆலம்கிர் ஆலமின் உதவியாளர் சஞ்சீவ் லாலின் வீடு உள்பட பல்வேறு இடங்களில் இன்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சஞ்சீவ் லாலின் வீட்டில் இருந்து 20 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Next Story