காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு...!


தினத்தந்தி 25 May 2022 6:16 PM IST (Updated: 25 May 2022 6:26 PM IST)
t-max-icont-min-icon

பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டிய வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டி குற்றச்சாட்டில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவன் யாசின் மாலிக்கை தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்தது.

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யாசின் மாலிக் மீது பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியதாக தொடரப்பட்ட வழக்கு டெல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் யாசின் மாலிக் குற்றவாளி என என்ஐஏ கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்தது.

இந்நிலையில், குற்றவாளி யாசின் மாலிக்கிற்கு இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது. அதன்படி, பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டு உறுதியான நிலையில் குற்றவாளி யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி என்ஐஏ சிறப்பு கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

1 More update

Next Story