ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை


ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 27 Jun 2023 9:05 AM IST (Updated: 27 Jun 2023 12:31 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜம்மு ,

ஜம்மு காஷ்மீரில் அவ்வப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் நேற்றிரவு குல்காம் மாவட்டத்தில் உள்ள ஹூரா கிராமத்தில் திங்கள்கிழமை இரவு என்கவுன்டர் தொடங்கியது. இந்த துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது அடையாளம் கண்டறியப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) ஒரு பெரிய ஊடுருவல் முயற்சியை பாதுகாப்புப் படையினர் முறியடித்த சில நாட்களுக்குப் பிறகு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை வந்துள்ளது.

கடந்த வாரம் குப்வாரா மாவட்டத்தின் மச்சால் செக்டாரில் உள்ள காலா ஜங்கிள் பகுதியில் காவல்துறையும் ராணுவமும் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் உள்ள ஜம்குண்ட் கேரானில் ஊடுருவல் முயற்சியை முறியடித்த பாதுகாப்புப் படையினர் ஐந்து பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த என்கவுன்டர் வந்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர்) யில் இருந்து நமது பக்கம் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகளை குப்வாராவில் உள்ள மச்சல் செக்டாரின் காலா ஜங்கிள் பகுதியில் ராணுவமும் காவல்துறையும் கூட்டு நடவடிக்கையில் கொன்றுள்ளனர் என்று காஷ்மீர் போலீசார் தெரிவித்திருந்தனர். இந்திய ராணுவமும் இந்த தகவலை உறுதிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story