உக்ரைனுக்கு பக்கபலம்  அமெரிக்கா தலைமையிலான நேட்டோ... ... #லைவ் அப்டேட்ஸ்: 100-வது நாளை எட்டும் போர்: உக்ரைனில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷியா
Daily Thanthi 2022-06-01 23:50:55.0

உக்ரைனுக்கு பக்கபலம்

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி ரஷியா போரை தொடங்கியது.

நாளையுடன் 100-வது நாளை எட்டும் இந்த போர் உக்ரைனின் பல நகரங்களை சின்னாபின்னமாக்கி உள்ளது. பல ஆயிரம் மக்களை பலிகொண்டதோடு, லட்சக்கணக்கான மக்களை அகதிகளாக்கி உள்ளது. எனினும் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு வருகிறது.

இந்த போரில் அமெரிக்காவும், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு பெரும் பக்கபலமாக இருந்து வருகின்றன.


Next Story