8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49... ... நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தல்: 5 மணி நிலவரப்படி 56.68 சதவீத வாக்குப்பதிவு
Daily Thanthi 2024-05-20 05:03:04.0
t-max-icont-min-icon

8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கு இன்று 5ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அக்சய் குமார் வாக்களித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எனது இந்தியா வளர்ச்சியடைந்து வலுவாக இருக்க வேண்டும். அதை மனதில் வைத்து வாக்களித்தேன். இந்தியாவிற்கு எது சரி என்று நினைத்து அதற்கு வாக்களிக்க வேண்டும். வாக்களிக்கும் சதவீதம் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

1 More update

Next Story