இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நேற்று முதல்... ... இஸ்ரேலில் சிக்கி தவித்த 27 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு: மேகலயா முதல் மந்திரி தகவல்
x
Daily Thanthi 2023-10-08 08:16:34.0
t-max-icont-min-icon

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நேற்று முதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் இதுவரை 300 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே, ஹமாஸ் தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

இதில், இளம் பெண்ணை ஹமாஸ் பயங்கரவாதிகள் பைக்கில் கடத்தில் செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடத்தப்பட்ட இளம் பெண் இஸ்ரேலை சேர்ந்த நொவா அர்ஹம்னி (வயது 25) ஆவார். அவர் நேற்று காசா முனைக்கு அருகே உள்ள இஸ்ரேலின் கிபுட்ஸ் ரிம் எல்லையோர நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது நண்பருடன் வந்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் அர்ஹம்னியை பைக்கில் கடத்தி சென்றனர். தான் பைக்கில் ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்படும்போது அர்ஹம்னி என்னை கொன்றுவிடாதீர்கள் என்று அழுதபடி செல்லும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.



1 More update

Next Story