காசா மீது ‘முப்படை’ தாக்குதல் நடத்த தயாராகும்... ... இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 9ம் நாளாக தொடரும் போர்..!!
Daily Thanthi 2023-10-15 05:59:23.0
t-max-icont-min-icon

காசா மீது ‘முப்படை’ தாக்குதல் நடத்த தயாராகும் இஸ்ரேல்

வடக்கு காசாவில் உள்ள பொதுமக்கள் உடனடியாக தெற்கு பகுதிக்கு செல்லும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக வடக்கு காசாவில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெற்கு காசாவுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், வடக்கு காசாவில் உள்ள ஹமாஸ் நிலைகள் மீது தரைவழி, வான்வழி, கடல்வழி என முப்படை தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை வெளியிட்ட அறிவிப்பில், காசா மீது தரை, வான், கடல் வழியாக ஒருங்கிணைந்த முப்படை தாக்குதல் நடத்த தயாராக உள்ளோம். காசா எல்லையில் அதிக அளவிலான வீரர்களை ராணுவம் குவித்துள்ளது. இறுதி உத்தரவுக்காக காத்துள்ளோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story