உக்ரைனின் கிழக்கு லுஹான்ஸ்க் மாகாணத்தில்,... ... #லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் நகரில் காலரா பரவும் ஆபத்து..!!
Daily Thanthi 2022-06-11 13:41:44.0
t-max-icont-min-icon

உக்ரைனின் கிழக்கு லுஹான்ஸ்க் மாகாணத்தில், சீவிரோடோனெட்ஸ்க் மற்றும் லைசிசான்ஸ்க் நகரங்களுக்கு தென்மேற்கே உள்ள வ்ரூபிவ்கா கிராமத்தில் ரஷியா ஃபிளமேத்ரோவர் ஆயுதத்தை பயன்படுத்தியதாக உக்ரேனிய கவர்னர் ஒருவர் குற்றம் சாட்டினார்.

போர்க்களத்தில் ஃபிளமேத்ரோவர்களைப் பயன்படுத்துவது சட்டப்பூர்வமானது என்றாலும், லுஹான்ஸ்க் மாகாணத்தின் கவர்னர் செர்ஹி ஹைடாய், ஒரே இரவில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பொதுமக்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டினார். ஹைடாயின் கூற்றுகளின் உண்மை நிலையை உடனடியாகச் கண்டறிய முடியவில்லை.

சீவிரோடோனெட்ஸ்க், லிசிசான்ஸ்க் ஆகியவை உக்ரேனிய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் லுஹான்ஸ்க் மாகாணத்தின் கடைசி பெரிய பகுதிகளாகும். ரயில்வே டிப்போக்கள், செங்கல் தொழிற்சாலை மற்றும் கண்ணாடி தொழிற்சாலை உள்ளிட்ட முக்கியமான தொழில்துறை பகுதிகளை ரஷிய படைகள் அழித்து வருவதாக ஹைடாய் கூறினார்.


Next Story