மாஸ்கோ,  உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியா, இப்போது... ... லைவ் அப்டேட்ஸ்: கடும் போரால் கிழக்கு உக்ரைனில் இருந்து 20 லட்சம் பேர் வெளியேற்றம்
Daily Thanthi 2022-06-23 00:41:01.0
t-max-icont-min-icon

மாஸ்கோ,

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியா, இப்போது கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதி மீது தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதியைச் சேர்ந்த 20 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் ரஷியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

உக்ரைன் புகைப்பட பத்திரிகையாளர் மாக்ஸ் லெவினும், வீரர் ஒலக்சிய் செர்னிஷோவும் போரின் ஆரம்ப காலத்தில் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக பத்திரிகை சுதந்திர குழுவான எல்லையில்லா நிருபர்கள் குழு நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

அவர்களது உடல்கள் மீது பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதா என்பதையும் உறுதிசெய்ய இயலவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story