அரசியல் கட்சிகளுக்கு வழிகாட்டும் பேரியக்கம்... ... தி.மு.க. கூட்டணி வெற்றிக்கூட்டணி.. பிளவை ஏற்படுத்த முடியாது - பவள விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
Daily Thanthi 2024-09-28 13:48:06.0
t-max-icont-min-icon

அரசியல் கட்சிகளுக்கு வழிகாட்டும் பேரியக்கம் தி.மு.க.- பவளவிழா பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு

திமுக பவள விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசியதாவது;

திராவிட முன்னேற்ற கழகன் 75 ஆண்டுகளாக வீறு கொண்டு வெற்றி நடைபோடுகிறது. பெரியாரின் கொள்கை வழியில் திமுக தொடர்ந்து இயங்கி வருகிறது. அரசியல் முதிர்ச்சி, கொள்கை முதிர்ச்சி கொண்ட கட்சி திமுக. இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடும் கட்சி திமுக. சமூக நீதி ஆட்சியை திமுக நடத்திக்கொண்டிருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழிகாட்டும் பேரியக்கம் தி.மு.க.

நாட்டுக்கே முன்னோடியான பல திட்டங்களை அறிமுகப்படுத்தியவர் கருணாநிதி. சுயமரியாதையை அழுத்தமாக நடைமுறைப்படுத்தியவர் கருணாநிதி. திமுக ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என பிரகடனப்படுத்தியவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். பேராளுமை கொண்ட தலைவராக முதல்-அமைச்சர் திகழ்கிறார். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் திமுக தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.” என்று பேசினார்.  

1 More update

Next Story