தரைவழி தாக்குதலுக்கான ஒத்திகை - இஸ்ரேல்... ... தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 8 ஆயிரத்து 500ஐ கடந்தது
x
Daily Thanthi 2023-10-26 22:43:05.0
t-max-icont-min-icon

தரைவழி தாக்குதலுக்கான ஒத்திகை - இஸ்ரேல் ராணுவம்

தரைவழியாக சென்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர் பலர் கொன்று குவிக்கப்பட்டதாகவும், அவர்களின் பதுங்கு குழிகள், ஆயுதகிடங்குகள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

எனினும் முழுமையான தரைவழி தாக்குதலை இன்னும் தொடங்கவில்லை என்றும், இந்த நடவடிக்கையை தரைவழி தாக்குதலுக்கான ஒத்திகை என்றும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

முன்னதாக, இஸ்ரேல் மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு, “காசா மீதான தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. எப்போது, எப்படி என்பதை நான் விரிவாகக் கூறமாட்டேன். ஆனால், ஹமாசின் இலக்குகளை அழிக்க, காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம்” என்றார்.

1 More update

Next Story