ஊக்க மருந்து சோதனையில் ஈராக் வீரர் சிக்கினார்


ஊக்க மருந்து சோதனையில் ஈராக் வீரர் சிக்கினார்
x
Daily Thanthi 2024-07-26 21:17:08.0
t-max-icont-min-icon

ஒலிம்பிக் திருவிழா பாரீசில் நேற்று தொடங்கியது. இதில் ஜூடோ போட்டியில் பங்கேற்க இருந்த ஈராக் வீரர் சஜத் சிஹெனிடம் கடந்த செவ்வாய்க்கிழமை சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு முகமை சார்பில் ஊக்க மருந்து பரிசோதனைக்கான மாதிரி எடுக்கப்பட்டது. இதனை பரிசோதனை செய்ததில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து 28 வயது சஜத் சிஹென் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாது. பாரீஸ் ஒலிம்பிக்கில் ஊக்க மருந்து சோதனையில் மாட்டிய முதல் நபர் சஜத் சிஹென் ஆவார்.

1 More update

Next Story