இலங்கையில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி  ... ... ராமேசுவரத்தில் புதிய பாம்பன் ரெயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
x
Daily Thanthi 2025-04-06 05:27:23.0
t-max-icont-min-icon

இலங்கையில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் இலங்கை சென்றார். தலைநகர் கொழும்புவில் அந்த நாட்டு அதிபர் அனுரா குமார திசநாயகாவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

குறிப்பாக இரு தலைவர்களும் உயர்மட்டக்குழுவினருடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இந்தியா சார்பில் பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் பல்வேறு துறைகளில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடியும், திசநாயகாவும் விவாதித்தனர்.

இந்நிலையில் இலங்கை பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டார். இதன்படி இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி ராமேஸ்வரம் வர உள்ளார். 

1 More update

Next Story