கடந்த ஒலிம்பிக்கில் 53 கிலோ எடைப்பிரிவில்... ... வினேஷ் போகத் தகுதி நீக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை.. சர்வதேச மல்யுத்த சங்கம் திட்டவட்டம்
Daily Thanthi 2024-08-07 08:13:02.0
t-max-icont-min-icon

கடந்த ஒலிம்பிக்கில் 53 கிலோ எடைப்பிரிவில் விளையாடிய வினேஷ் போகத், இந்த முறை உடல் எடைடைய குறைத்து 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றார். உடல் எடையை குறைப்பதற்காக வினேஷ் போகத் உணவை குறைத்துள்ளார். இதுதவிர கடுமையான பயிற்சிகளையும் செய்துள்ளார். நேற்று இரவு சரியாக தூங்காமல் பயிற்சி செய்துள்ளார். உடல் எடையை நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் கொண்டு வருவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இந்திய அதிகாரிகளும் ஒலிம்பிக் கமிட்டியிடம் கூடுதல் அவகாசம் கேட்டனர். ஆனால் இந்த முயற்சிகள் வீணாகின.

இன்று காலையில் எடையை சோதனை செய்தபோது வினேஷ் வெறும் 100 கிராம் அதிக எடையுடன் காணப்பட்டதாக இந்திய பயிற்சியாளர் தெரிவித்தார். இந்த விளிம்பு சிறியதாக இருந்தாலும், ஒலிம்பிக் விதிமுறையில் விதிவிலக்கு எதுவும் இல்லாததால் போட்டியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

1 More update

Next Story