
அமெரிக்க காங்கிரசில் உரையாற்றுவது எப்போதுமே ஒரு பெரிய மரியாதை - நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி
வாஷிங்டன்,
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி உரையாற்றினார். இந்தியாவின் பிரதமர் ஒருவர் அமெரிக்க காங்கிரசில் 2வது முறையாக உரையாற்றுவது இதுவே முதல்முறை.
இவருக்கு முன்பு வின்ஸ்டன் சர்ச்சில், நெல்சன் மண்டேலா, பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட வெகு சிலருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் இரண்டு முறை உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் மோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமெரிக்க காங்கிரசின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “அமெரிக்க காங்கிரசில் உரையாற்றுவது எப்போதுமே ஒரு பெரிய மரியாதை. இரண்டு முறை செய்வது ஒரு விதிவிலக்கான பாக்கியம். இந்த கௌரவத்திற்காக, இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களுக்கு எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2016ல் உங்களில் பாதி பேர் இங்கு இருந்ததை நான் காண்கிறேன். பழைய நண்பர்கள் மற்றும் புதிய நண்பர்களின் உற்சாகத்தையும் மற்ற பாதியில் பார்க்க முடிகிறது” என்று அவர் கூறினார்.






