தத்தளிக்கும் சென்னை.. மின்சாரம் துண்டிப்பு ... ... லைவ் அப்டேட்ஸ்: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று "ரெட் அலர்ட்": கனமழை நீடிப்பு
Daily Thanthi 2024-10-15 09:36:01.0
t-max-icont-min-icon

தத்தளிக்கும் சென்னை.. மின்சாரம் துண்டிப்பு

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி வாகன போக்குவரத்து முடங்கி உள்ளது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. புளியந்தோப்பு, பட்டாளம் பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

வியாசர் பாடியில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. வியாசர்பாடி பிரதான சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளது. முல்லை நகர், பாரதி நகர் பகுதிகளில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.  

1 More update

Next Story