உக்ரைனுக்கு தொடர்ந்து எங்கள் ஆதரவை வழங்குவோம் -... ... #லைவ் அப்டேட்ஸ்: ரஷிய போரால் உக்ரைனுக்கு ரூ.45 லட்சம் கோடி இழப்பு
Daily Thanthi 2022-06-04 00:30:51.0
t-max-icont-min-icon


உக்ரைனுக்கு தொடர்ந்து எங்கள் ஆதரவை வழங்குவோம் - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கடந்த 100 நாட்களாக ரஷியா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து உக்ரேனிய மக்களுக்கு தங்கள் நாட்டின் ஆதரவு தொடர்ந்து வருவதாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “ரஷியாவின் முழு அளவிலான படையெடுப்பிற்கு எதிரான உக்ரேனிய எதிர்ப்பின் 100வது நாள் இன்று. உக்ரைன் மக்களுக்கான எங்கள் ஆதரவு இந்த நேரத்தில் உறுதியாக உள்ளது. - அது ஒருபோதும் மாறாது. நாங்கள் தொடர்ந்து உதவிகளை வழங்குவோம், மேலும் அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தேவையானவற்றை வைத்திருப்பதை உறுதி செய்வோம்” என்று ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். 

1 More update

Next Story