கீவ்,  உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில்... ... லைவ் அப்டேட்ஸ்: கார்கிவில் ரஷிய படைகள் குண்டுவீசித் தாக்குதல் - 8 வயது குழந்தை உட்பட 15 பேர் பலி
Daily Thanthi 2022-06-24 00:14:20.0
t-max-icont-min-icon

கீவ்,

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் ரஷிய படைகள் நிகழ்த்திய குண்டுவீச்சு தாக்குதலில் 8 வயது குழந்தை உட்பட 15 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையேயான போர் 5 மாதங்களை நெருங்கி விட்ட நிலையில், கிழக்கு உக்ரைனைக் கைப்பற்றும் முயற்சியில் ஆயிரக்கணக்கான வீரர்களை குவித்து ரஷியா கடும் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது.

இந்நிலையில், வடகிழக்கு உக்ரைனின் நான்கு வெவ்வேறு இடங்களில் நடந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 16 பேர் காயமடைந்ததாக பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story