அத்வீவ்கா நகரில் பள்ளி ஒன்று ரஷியா நடத்திய... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் பகுதியை விட்டுக்கொடுக்க மாட்டோம் - ஜெலன்ஸ்கி உறுதி
Daily Thanthi 2022-06-21 06:51:37.0


அத்வீவ்கா நகரில் பள்ளி ஒன்று ரஷியா நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் அழிக்கப்பட்டது: அம்மாநில கவர்னர் தகவல்

டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள அத்வீவ்கா நகரில் உள்ள ஒரு பள்ளியை ரஷியப் படைகள் இரவோடு இரவாக குண்டு வீசி அழித்ததாக அம்மாநில கவர்னர் பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் தனது டெலிகிராம் பக்கத்தில், “இது அத்வீவ்காவில் ரஷியர்களால் அழிக்கப்பட்ட மூன்றாவது பள்ளியாகும். மொத்தத்தில், ரஷிய படையெடுப்பாளர்கள் டொனெட்ஸ்க் பகுதியில் சுமார் 200 பள்ளிகளை அழித்துள்ளனர்” என்று கைரிலென்கோ தெரிவித்துள்ளார்.


Next Story