இந்த மாதம் திரைக்கு வரும் பாக்யஸ்ரீ போர்ஸின் 2 படங்கள்

முதலில் திரையரங்குகளில் வெளியாகும் படம் "காந்தா".
சென்னை,
நல்ல வெற்றி படத்தை கொடுப்பதற்கு முன்பே பல பெரிய படங்களைப் பெற்றுள்ள நடிகைகளில் பாக்யஸ்ரீ போர்ஸ் ஒருவர். தனது கவர்ச்சி மற்றும் நடிப்பால் கவனத்தை ஈர்த்த இவருக்கு தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகள் தேடி வருகின்றன.
இவர் தெலுங்கில் நடித்த ரவி தேஜாவின் மிஸ்டர் பச்சன் மற்றும் விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் ஆகிய இரண்டு படங்களுமே பெரிய வெற்றியை பெறவில்லை.
இந்த மாதம் அவருக்கு திருப்புமுனையாக இருக்கலாம். ஏனெனில் அவர் நடித்த 2 படங்கள் இந்த மாதம் திரைக்கு வருகின்றன.
முதலில் திரையரங்குகளில் வெளியாகும் படம் "காந்தா". துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் பாக்யஸ்ரீ கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் வருகிற 14-ம் தேதி வெளியாகிறது.
அவரது இரண்டாவது படம் "ஆந்திர கிங் தாலுகா" . இதில் கதாநாயகனாக ராம் பொதினேனி நடித்துள்ளார். இந்த படத்தில் உபேந்திராவின் தீவிர ரசிகராக ராம் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற 28-ம் தேதி வெளியாகிறது.






