'2கே லவ் ஸ்டோரி' படத்தின் 4-வது பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு


2K Love Story 4th song release date announced
x

'2கே லவ் ஸ்டோரி' படத்தின் 4-வது பாடல் ’எதுவரை உலகமோ’.

சென்னை,

வெண்ணிலா கபடிக்குழு படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான சுசீந்திரன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் '2கே லவ் ஸ்டோரி'. இன்றைய இளம் தலைமுறையின் காதல், நட்பு என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது.

சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார்.

ஏற்கனவே இப்படத்தின் 3 பாடல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், தற்போது 4-வது பாடலுக்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'எதுவரை உலகமோ' என்ற இந்த பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. இப்படம் வரும் 14-ம் தேதி திரைக்கு வருகிறது.


Next Story