’3 காதல் தோல்விகள்....இரண்டாவதை மறக்கவே முடியவில்லை’ - பிரபல நடிகை

சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட இவர் தனது காதல் தோல்வி பற்றி சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
சென்னை,
நடிகையாக அதிகம் காணப்படவில்லை என்றாலும், தொலைக்காட்சி தொகுப்பாளராக இவர் அதிகம் பிரபலமானார். தெலுங்கு பிக் பாஸின் எட்டாவது சீசனில் இவர் பங்கேற்றிருந்தார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட இவர் தனது காதல் தோல்வி பற்றி சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் யார் தெரியுமா?. வேறு யாறுமில்லை விஷ்ணு பிரியாதான். அவர் பேசுகையில், ’எனக்கு மூன்று காதல் தோல்விகள் உள்ளன. அதில் இரண்டாவது தோல்வியை மறக்க மூன்று வருடங்கள் காசி மற்றும் புனித தலங்களுக்குச் சென்றேன். அதை மறக்க நீண்ட காலம் ஆனது’ என்றார்.
விஷ்ணு பிரியா தனது வாழ்க்கையை யூடியூபராகத் தொடங்கினார். ஈ-டிவியில் போரா போவ் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக மாறினார். தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்தார். இவர் கதாநாயகியாக வாண்டடு பாண்டுகோடு என்ற படத்தில் நடித்திருக்கிறார்.







