புஷ்பா பட தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தில் 'லால் சலாம்' நடிகை


8 Vasanthalu teaser 1: All about past loves
x

இப்படத்தின் முதல் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

கடந்த மாதம் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் புஷ்பா 2. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்த இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இப்படத்தை தொடர்ந்து, இந்நிறுவனம், சன்னி தியோலின் ஜாத், நித்தினின் ராபின்ஹுட் உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறது. இது மட்டுமில்லாமல் '8 வசந்தலு' என்ற படத்தையும் தயாரிக்கிறது. பனீந்திர நரசெட்டி இயக்கும் இப்படத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருந்த அனந்திகா சனில்குமார் கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும், ரவி தேஜா துக்கிராலா, சுமந்த் நிட்டூர்கர், ஹனு ரெட்டி, கண்ணா பசுநூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் முதல் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

1 More update

Next Story