கடந்த 3 வாரங்களில் 9 பேர் உயிரிழப்பு - தமிழக அரசுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம்


கடந்த 3 வாரங்களில் 9 பேர் உயிரிழப்பு - தமிழக அரசுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம்
x
தினத்தந்தி 19 May 2023 2:09 AM IST (Updated: 20 Jun 2024 1:41 PM IST)
t-max-icont-min-icon

மலக்குழி மரணங்களை உடனே தடுத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

சென்னை,

2012-ம் ஆண்டு வெளியான 'அட்டகத்தி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.இரஞ்சித். அதன்பின்னர் கார்த்தி நடிப்பில் மெட்ராஸ், ரஜினி நடிப்பில் கபாலி மற்றும் காலா ஆகிய படங்களை இயக்கியிருந்தார். தொடர்ந்து சர்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார்.

இதனிடையே நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பா.இரஞ்சித், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர், சேத்துமான், பொம்மை நாயகி உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார். இவர் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சமூக அக்கறைக் கொண்ட பல கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித் மலக்குழி மரணங்கள் குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தொடரும் மலக்குழி மரணங்கள்! தமிழ் நாட்டில் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் ஒன்பது உயிர்களை பலி கொடுத்திருக்கிறோம்! இக் கொடுமையான சமூக அவலத்தை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கும், தமிழக அரசிற்க்கும் கடும் கண்டனங்கள்!!! மலக்குழி மரணங்களை குறிப்பிட்ட சமூக மக்களின் பிரச்சனையாக மட்டும் கருதி கடந்து போகாமல் ஒட்டு மொத்த மனித சமூகத்தின் அவலமாக கருதி, சட்டங்களை இன்னும் கடுமையாக்கி, மக்களிடையே சரியான விழிப்புணர்வை உண்டாக்கி, உடனே தடுத்திட முனைவோம்! தமிழக அரசே மலக்குழி மரணங்களை உடனே தடுத்திடு!!!" என்று பதிவிட்டுள்ளார்.



1 More update

Next Story