ஒரு ஹீரோவை பார்த்து இப்படி கேப்பீங்களா? கொந்தளித்த “96” பட நடிகை

அபின் ஹரிஹரன் இயக்கத்தில் கவுரி கிஷன் நடித்த ‘அதர்ஸ்’ படம் நாளை வெளியாக உள்ளது.
ஒரு ஹீரோவை பார்த்து இப்படி கேப்பீங்களா? கொந்தளித்த “96” பட நடிகை
Published on

கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் அதர்ஸ். மெடிகல் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தினை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

கேரளத்து தேசத்தில் பிறந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகைகளில் கவுரி கிஷனும் ஒருவர். 96' படத்தில் அவர் நடித்த ஜானு கதாபாத்திரம் அவருக்கு பெரியளவில் பெயரை ஏற்படுத்தி தந்தது. மாஸ்டர்', கர்ணன்', அடியே', ஹாட் ஸ்பாட்', போட்' என பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கிலும் நடித்து கொண்டிருக்கிறார். அதர்ஸ் படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் முந்தைய செய்தியாளர் சந்திப்பு கடந்த 30ம் தேதி நடைபெற்றது. படத்தின் பாடலில் நடிகையை தூக்கினீர்களே நடிகையின் எடை என்ன? என கதாநாயகனிடம் யூடியூபர்கள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய கவுரி கிஷன் இதுபோன்ற ஸ்டுப்பிட்டான கேள்விகள் எழுப்பப்படுகிறது. இதுபோன்ற கேள்விகள் சரியான கேள்விகள் அல்ல என அந்த விமர்சனம் தொடர்பாக பேசியிருந்தார். 

இந்த நிலையில் இன்றைய அதர்ஸ் பட செய்தியாளர் சந்திப்பில், நடிகை கவுரி கிஷனை டார்கெட் செய்யும் அளவிற்கு யூ டியூபர்கள் இருவர் மாறி மாறி கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதில் அளித்த நடிகை கவுரி கிஷன் உடல் எடை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி என்னை உருவக் கேலியை செய்ததற்கு சமம். கதாநாயகனிடம் என்னைப் பற்றி கேட்டாலும் என்னுடைய எடை தொடர்பாகவே எழுப்பப்பட்ட கேள்வி எனவே அந்த கேள்வி தொடர்பாக நான் விமர்சனம் செய்திருந்தேன் என பதில் அளித்தார். 

View this post on Instagram

ஒரு ஹீரோவை பார்த்து இப்படி கேப்பீங்களா? என்று நடிகை கவுரி கிஷன் கேள்வி எழுப்பினார். இருப்பினும், நடிகை கவுரி கிஷனை பேசவிடாமல் மாறி மாறி சத்தம் எழுப்பியதால் நடிகை கவுரி கிஷன் கண்கலங்கினார். செய்தியாளர் சந்திப்பில் ஒரு பெண் கூட இல்லாத நிலையில் இந்த தரமற்ற செயலுக்கு யாரும் கேள்வி எழுப்பமாட்டுகிறீர்கள் என செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினார். பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் யூடியூபர்கள் செய்யும் செயலால் நடிகை கவுரி கிஷன் செய்தியாளர் சந்திப்பு முடிந்து மௌனமாக புறப்பட்டு சென்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com