யாஷ் நடித்துள்ள ’டாக்சிக்’ படத்தின் டீசருக்கு எதிராக புகார்


யாஷ் நடித்துள்ள ’டாக்சிக்’  படத்தின் டீசருக்கு எதிராக புகார்
x

2 நிமிடங்கள் 51 வினாடிகள் ஓடக்கூடிய இந்த டீசர் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

பெண் இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்து வரும் ‘டாக்சிக்' படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதில் ஏற்கனவே நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மினி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. 2 நிமிடங்கள் 51 வினாடிகள் ஓடக்கூடிய இந்த டீசர் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. டீசரில் இடம்பெற்றுள்ள ஆபாச காட்சிகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

இதற்கிடையில் கர்நாடகா மாநில மகளிர் ஆணையத்தில் அங்குள்ள அரசியல் கட்சியினர் மற்றும் மாதர் சங்க அமைப்பினர் டாக்சிக் படத்தின் டீசருக்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரில், ‘டாக்சிக்' படத்தின் டீசர் காட்சிகள் ஆபாசமாக இருக்கிறது. அந்த காட்சிகள் பெண்கள், குழந்தைகள் மற்றும் சமூக கலாசார மதிப்பீடுகளில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கவேண்டும், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1 More update

Next Story