பாலிவுட் கிங் ஷாருக்கான் பெயரில் துபாயில் 55 மாடி பிரமாண்ட கட்டிடம்


பாலிவுட் கிங் ஷாருக்கான் பெயரில் துபாயில் 55 மாடி பிரமாண்ட கட்டிடம்
x

இந்த கட்டிடம் கட்டுமான பணிகள் முடிவதற்கு முன்பே ரூ.5 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது.

இந்தியாவில் மட்டும் இன்றி சர்வதேச அளவில் பிரபல நடிகராக இருப்பவர் ஷாருக்கான். உலக அளவில் ரசிகர், ரசிகைகளை கொண்ட ஷாருக்கான் பெயரில் துபாயில் வணிக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஸ்வான் சாஜன் இந்த வணிக கட்டிடத்தை ரூ.3500 கோடி செலவில் கட்டி வருகிறார். 55 மாடி கொண்ட இந்த கட்டிடம் துபாய் செட் சாலையில் அமைந்துள்ளது.

ஒரு மில்லியன் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்தக் கட்டிடத்தில் 488 அலகுகள் இருக்கிறது. பிரமிக்கதக்க வகையில் உருவாகியுள்ள இந்த கட்டிடம் கட்டுமான பணிகள் முடிவதற்கு முன்பே ரூ.5 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதை தொடர்ந்து இந்த நிறுவனம் ஷாருக்கான் பெயரில் நியூயார்க், லண்டன் மற்றும் டெல்லி, மும்பையில் கட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story