"அரசன்" படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படம் வைரல்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நேற்று தொடங்கியது.
"அரசன்" படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படம் வைரல்
Published on

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு அரசன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வடசென்னை கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சமுத்திரகனி , கிஷோர் , விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். முதற்கட்டமாக சிம்புவின் இளம் பருவத்து காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

கோவில்பட்டியில் நேற்று தொடங்கியிருக்கும் முதற்கட்ட படப்பிடிப்பு மூன்று வாரங்கள் நடைபெறும் எனத் தெரிகிறது. சிலம்பரசனின் ஒரு கேரக்டர் பெயர் மதுரை டைகர் என்று தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் தொடங்கும் கதை, வட சென்னை வரை வருகிறது என்றும் சொல்கிறார்கள். விளையாட்டு வீரராக அவர் கேம் ஆடும் காட்சிகளுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com