'கிராமத்து பெண்ணா? ... நகரத்து பெண்ணா? - ஒரே வரியில் பதிலளித்த சிம்பு


A village girl? ... a city girl? - Simbus reply
x

தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிம்பு கலந்துகொண்டு பேசிய வீடியோகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, தற்போது தக் லைப் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளநிலையில், சிம்பு அடுத்தடுத்து இன்னும் பெயரிடப்படாத 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

இந்நிலையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிம்பு கலந்துகொண்டு பேசிய வீடியோகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த விழாவில் ஒருவர் சிம்புவிடம், இப்போது உங்களிடம் 2 பெண்கள் புரொபோஸ் பண்ணுகிறார்கள். ஒருவர் கிராமத்து பெண், மற்றொருவர் நகரத்து பெண். நீங்கள் யாரை ஏற்றுக்கொள்வீர்கள் என கேட்டார்.

அதற்கு சிம்பு, 'கிராமத்து பெண் , நகரத்து பெண் என்று முதலில் பிரித்து பார்க்காதீர்கள். பெண்கள் என்றால் பெண்கள்தான். ஜீன்ஸில் சுற்றுகிறவர்கள் எல்லாம் கெட்ட பொண்ணுங்களும் இல்லை... சுடிதாரில் இருக்கிறவர்கள் எல்லாம் நல்ல பொண்ணுங்களும் இல்லை. அப்படி ஒருவேளை நான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் ஒரே விஷயம்தான், அவர் பொண்ணாக இருந்தால் போதும் அவ்வளவுதான்' என்றார்

1 More update

Next Story