திருச்சியில் அபிஷன் ஜீவிந்த் - அனஸ்வரா...வைரலாகும் புகைப்படம்


Abishan Jeevinth and Anaswara Rajan share fun moments from their films Trichy schedule
x
தினத்தந்தி 21 Sept 2025 8:20 AM IST (Updated: 21 Sept 2025 12:51 PM IST)
t-max-icont-min-icon

அபிஷன் ஜீவிந்த் தற்போது கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தற்போது கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்து வருகிறார்.

டூரிஸ்ட் பேமிலி படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குனராக இருந்த மதன் இப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில், அனஸ்வரா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சில பதிவுகளை வெளியிட்டார்.

திருச்சிராப்பள்ளி ரெயில் நிலையத்தின் முன் அனஸ்வரா போஸ் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

1 More update

Next Story