உதயா நடித்த "அக்யூஸ்ட்" படத்தின் 2வது பாடல் வெளியீடு
'அக்யூஸ்ட்' படத்தின் 'சுட சுட பிரியாணி' பாடலை இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி இணைந்து பாடியுள்ளனர்.
சென்னை,
கன்னட இயக்குனரான பிரபு ஸ்ரீனிவாஸ் இயக்கியுள்ள படம் 'அக்யூஸ்ட்'. இந்த படத்தில் 'திருநெல்வேலி' படம் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் உதயா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் அஜ்மல், யோகி பாபு, பிரபு சாலமன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தின் ஒளிப்பதிவை மருதநாயகம், இசையை நரேன் பாலகுமார் மேற்கொண்டுள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் உதயா நடித்த 'அக்யூஸ்ட்' படத்தின் 2வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 'சுட சுட பிரியாணி' பாடலை இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி இணைந்து பாடியுள்ளனர்.
Related Tags :
Next Story







