நடிகர் அமீர் கானின் தாயார் டிஸ்சார்ஜ்


Actor Aamir Khans mother discharged
x

அமீர் கானின் தாயார் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சென்னை,

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர் கான். பாலிவுட்டில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கி வரும் 'சித்தாரே ஜமீன் பர்' படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் 'கூலி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடிகர் அமீர் கானின் தாயார் ஜீனத் ஹுசைனுக்கு (வயது 90) உடல்நலக்குறைவு ஏற்பட்டநிலையில், அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

இந்நிலையில், உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் அமீர் கானின் தாயார், உடல் நலம் தேறியதையடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.


1 More update

Next Story