விஜய்யின் அரசியல் குறித்த கேள்விக்கு நடிகர் பார்த்திபன் பதில்


Actor Parthiban answers Vijays question about politics
x

விஜய்யின் அரசியல் குறித்த கேள்விக்கு நடிகர் பார்த்திபன் பதிலளித்தார்.

சென்னை,

பிரபல நடிகரும் இயக்குனருமானவர் பார்த்திபன். இன்று செய்தியாளர்களை சந்தித்த இவர், விஜய்யின் அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

"நான் அனைத்தையும் நேர்மறையாக பார்ப்பேன். நண்பர் விஜய்க்கு இது அவசியமே இல்லை. இப்போது அரசியல் வரவேண்டும் என்று அவசியமே இல்லை. பெரிய ராஜாங்கம் நடத்தி வருகிறார். அடுத்த சூப்பர் ஸ்டார் அவர் தான். கலெக்சன் மன்னன் . ரூ.200 கோடி சம்பளம். இப்படி ஒரு சிம்மாசனத்தை விட்டு விட்டு அவர் எதற்கு மக்கள் பிரச்சனைகளைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்.

அப்படியென்றால், அவர் எதோ நல்லது செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறார். அவரை தடுத்து நிறுத்துவதற்கு பதில் சப்போர்ட் பண்ணிவிடலாம். மாறுதல் ஒன்றே மாறாதது. கடைசி வரைக்கும் இவர்கள்தான் ஆட்சி செய்ய வேண்டும் இவர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது. யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம்

ஏற்கனவே சில நடிகர்கள் அரசியலுக்கு வந்து பின்வாங்கியதில் விஜய்யும் பின்வாங்கி விடுவாரோ என்ற சந்தேகம் உள்ளது. இருந்தாலும் அந்த சந்தேகத்தை ஊதி பெரிதாக்கி நல்லது செய்ய வருபவரை நாம் ஏன் பயமுறுத்த வேண்டும். அதனால் விஜய் முனைப்புடன் அரசியலில் செயல்படட்டும்" என்றார்.

1 More update

Next Story