நடிகர் ரஜினிக்கு “வாழ்நாள் சாதனையாளர்” விருது

50 ஆண்டுகள் திரையுலகில் புரிந்த சாதனைகளுக்காக 56வது சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு விருது வழங்கப்பட்டது.
இந்திய சர்வதேச திரைப்பட விழா ஆண்டுதோறும் கோவா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவா தலைநகர் பனாஜியில் கடந்த 20ம் தேதி தொடங்கியது.
இவ்விழாவில் , 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட்டன. இந்தியத் திரைப்பட விழாக்களில் நாட்டின் முக்கிய திரைக்கலைஞர்கள் கவுரவிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில், கோவாவில் நடைபெறும் 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளான இன்று நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கி கவுரவவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, விருது பெற்றது குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், “என்னுடைய 50 ஆண்டு சினிமா பயணம் வேகமாக ஓடிவிட்டது. சினிமாவையும், நடிப்பையும் விரும்புகிறேன். இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் நடிகராகவே பிறக்கவே விரும்புகிறேன். என்னை வாழவைக்கும் மக்கள், திரைத்துறையினர், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி” என்று பேசியுள்ளார்.






