"பெத்தி " படத்திற்காக உடலை முறுக்கேற்றிய ராம் சரண்


பெத்தி  படத்திற்காக உடலை முறுக்கேற்றிய ராம் சரண்
x
தினத்தந்தி 21 July 2025 3:03 PM IST (Updated: 22 July 2025 12:31 PM IST)
t-max-icont-min-icon

ராம் சரண், ஜான்வி கபூர் நடித்த 'பெத்தி' படம் அடுத்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி வெளியாக உள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் தனது 16-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'பெத்தி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். ராம் சரணுடன் ஜான்விகபூர் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.

இயக்குனர் புச்சி பாபு இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'பெத்தி' படம் அடுத்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி வெளியாக உள்ளது. கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் படத்திற்காக கடுமையான உடற்பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார் நடிகர் ராம் சரண். அவர் ஜிம்மில் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அனைவரும் பீஸ்ட் மோட் ஆன் என தலைப்பில் படத்தை அதிகளவு ஷேர் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story