"தமிழ்நாட்லயும் இருக்கு..." - ராமேசுவரத்தில் சாமி தரிசனம் செய்த பின் ரிஷப் ஷெட்டி சொன்ன விஷயம்

காந்தாரா சாப்டர் 1 படம் விவசாயம், கிராம வாழ்கையை பிரதிபலித்ததால் மக்களுக்கு பிடித்திருப்பதாக ரிஷப் ஷெட்டி கூறினார்.
Actor Rishabh Shetty had darshan in Rameswaram
Published on

ராமேசுவரம் ,

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில், காந்தாரா பட இயக்குனரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காந்தாரா சாப்டர் 1 படம் விவசாயம், கிராம வாழ்கையை பிரதிபலித்ததால் மக்களுக்கு பிடித்திருப்பதாக கூறினார்.

தமிழ்நாட்டிலும் அப்படம், பெரிய வெற்றி பெற்று இருப்பதாகவும், அதற்காக தமிழ் மக்களுக்கு மனமார்ந்த நன்றி எனவும் கூறினார். பின்பு, அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com