'ஆடு 3' படப்பிடிப்பில் நடிகர் விநாயகன் காயம்.. மருத்துவமனையில் அனுமதி

நடிகர் விநாயகன் மிதுன் மானுவல் தாமஸ் இயக்கும் ஆடு 3 என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.
'ஆடு 3' படப்பிடிப்பில் நடிகர் விநாயகன் காயம்.. மருத்துவமனையில் அனுமதி
Published on

கொச்சி,

'ஜெயிலர்' படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்து மிகவும் பிரபலமானவர் விநாயகன். இவர் திமிரு மற்றும் பல படங்களில் நடித்திருந்தாலும் ரஜினியுடன் நடித்த 'ஜெயிலர்' படம்தான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்று விட்டது. இவர் மம்முட்டியுடன் இணைந்து 'களம் காவல்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். கடந்த 5ந் தேதி வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதற்கிடையில், நடிகர் விநாயகன் மிதுன் மானுவல் தாமஸ் இயக்கும் ஆடு 3 என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சண்டை காட்சிகள் படப்பிடிப்பு பணிகள் விநாயகனின் தோள்பட்டை எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், 6 வாரங்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தி உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com