நடிகை கனகாவின் தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார்

ஜனாதிபதி விருது பெற்ற இயக்குனர் எஸ்.எஸ்.தேவதாஸ் உடல்நலக்குறைவால் காலமானார்.
சென்னை,
1938 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த தேவதாஸ். ஜனாதிபதி விருது பெற்ற இவர் தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் உதவி இயக்குனராக பயணத்தை தொடங்கி, தன்னுடைய திறமையாலும் கடின உழைப்பாலும் பிரபலமான இயக்குனரானார். கடந்த 1971ல் வெளியான ‘வெகுளிப் பெண்’ என்ற படத்தை எஸ்.எஸ்.தேவதாஸ் இயக்கி இருந்தார். இதில் ஜெமினி கணேசன், தேவிகா நடித்திருந்தனர். இப்படம் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போது, நடிகை தேவிகா காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களின் மகள் நடிகை கனகா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குனர் எஸ்.எஸ்.தேவதாஸ் சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று முன்தினம் (30.11.2025) இரவு 10:30 மணி அளவில் காலமானார். இவரது மறைவு திரை உலகினர் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியது. திரைப்பட உலகில் தனக்கென ஒரு நல்ல பெயரைப் பெற்றிருந்த இவருக்கு பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.






