ஒருநாளைக்கு ரூ.25 ஆயிரம் செலவு செய்யும் நடிகை ரமோலா

எனக்கு தனிப்பட்ட செலவுகள் அதிகம் உள்ளதாக நடிகை ரமோலா கூறியுள்ளார்.
பெங்களூரு,
கன்னட திரைஉலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ரமோலா. இவர் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அவருடன் நடிகர் பவி பூவப்பா, நடிகை அம்ருதா உள்ளிட்ட சிலரும் பங்கேற்றனர். அவர்களிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் உங்களது ஒருநாள் செலவுக்கு எவ்வளவு தேவைப்படும் என்று கேட்டார்.
அப்போது நடிகை ரமோலா ரூ.25 ஆயிரம் என்று கூறினார். இதைக்கேட்டு நிகழ்ச்சி தொகுப்பாளர் அதிர்ச்சி அடைந்தார். எனக்கு தனிப்பட்ட செலவுகள் அதிகம் உள்ளது. அவற்றுக்காக எனக்கு ஒருநாளைக்கு மட்டும் ரூ.25 ஆயிரம் தேவை என்றார் நடிகை ரமோலா. தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story






