மகள் கண் முன்னே நடிகையை தாக்கிய ஆட்டோ டிரைவர்?...போலீசார் விசாரணை


actress shamim akbar alli alleges autorickshaw driver assaulted in front of her 5 year old daughter in mira road mumbai
x

போலீசார் வழக்குபதிவு செய்து இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மும்பை,

ஒரு ஆட்டோ டிரைவர் தன்னை தாக்கியதாக பாலிவுட் நடிகை ஷமிம் அக்பர் அல்லி போலீசில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2021 ஆம் ஆண்டு வெளியான 'இன் தி மந்த் ஆப் ஜூலை' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஷமிம் அக்பர் அல்லி, மும்பையின் மீரா சாலை பகுதியில் ஒரு ஆட்டோ டிரைவர் தன்னைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 1 ஆம் தேதி சனிக்கிழமை மதியம் தனது ஐந்து வயது மகளுடன் பயணம் செய்தபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறியுள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

1 More update

Next Story