ஜன நாயகனுக்குப் பிறகு ''எச்.வினோத்'' இயக்கப்போவது யாரை?...வெளியான முக்கிய தகவல்


After JanaNayagan, HVinoth is going do a Film with Dhanush
x
தினத்தந்தி 8 Jun 2025 10:41 PM IST (Updated: 8 July 2025 7:43 PM IST)
t-max-icont-min-icon

''ஜனநாயகன்'' படத்திற்கு பிறகு எச்.வினோத் இயக்க உள்ள படம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னை,

''சதுரங்க வேட்டை'' படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எச். வினோத். இவர் இயக்கிய முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து, ''நேர்கொண்ட பார்வை'', ''வலிமை'',''துணிவு, ''தீரன் அதிகாரம் ஒன்று'' போன்ற நல்ல படங்களை கொடுத்து சினிமாவில் பிரபலமானார்.

தற்போது இவர் விஜய்யின் ''ஜனநாயகன்'' படத்தை இயக்கி வருகிறார். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், ''ஜனநாயகன்'' படத்திற்கு பிறகு எச்.வினோத் இயக்க உள்ள படம் பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, எச். வினோத் அடுத்ததாக தனுஷை இயக்க போவதாகவும், அப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

1 More update

Next Story